மீண்டும் ஒரு காலம் March 2020/ பகுதி 1
- nalayiniindran
- Aug 2, 2021
- 1 min read
Updated: Aug 24, 2021
அழகிய மங்கிய மாலைப்பொழுது. மரங்களிற்கு இடையே பட்டுத்தெளிக்கின்ற மஞ்சள் வெயில் நீண்டு பரந்துகொண்டிருக்கின்ற செவ்வானம். அழகாகத்தானிருக்கின்றது. ஓடிக்கொண்டிருக்கின்ற வேகத்தில் ஒருநாளும் இருந்து ரசித்துப்பார்க்கின்ற அளவிற்கு என்னவோ நேரம் கிடைக்கவில்லைத்தான். ஒரே ஒரு கணம்தான், அந்த ரசனையும் ரசிப்பும். எந்தவொரு ஆரவாரமும் இல்லாமல் இன்னுமொரு வசந்தகால நாள் ஒன்று முடிந்துவிட்டது. மனமும் முற்றுமுழுதாக சுருண்டு போய்விட்டது, முன்முற்றத்தில் உள்ள டஃபோடில்ஸ் பூக்களைப்போல
மீண்டும் மனதில் துரத்திக்கொண்டிருக்கின்ற, தேங்கிக்கிடந்த மனப்பயம், பீதி திரும்பவும் மெதுவாக தலைகாட்டத்தொடங்குகிறது. சுற்றவர இருக்கின்ற நிசப்தமும், அமைதியும் உலுக்குகிறது.
தகவல்களை அறிந்து, அதனை ஆராய்ந்து, உண்மை பொய் தெளிந்து, பலதை தெளிந்து, சிலவற்றிற்கு விடை காணாமல் மனமும் என்னமோ களைத்துத்தான் போய்விட்டது.
இந்த பயம், நிச்சயமற்ற தன்மை, வேதனை, உணர்வுகள் பல வருடங்களுக்கு முன்பு கடந்து போய்விட்ட போர்க்கால வாழ்க்கையுடன் இணைத்து பார்ததுக்கொள்கின்றது.
பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் பற்றிய விபரங்கள் பின்புலத்தில் ஓடிக்கொண்டிருந்தது பொழுது கோடையும் ஒருநாள் வந்தது்.
அழகான அந்தி நேரமானாலும் கூட வெயில் இன்னமும் காய்ந்து கொண்டுதானிருக்கிறது. வேகமாக சென்று கொண்டிருந்தத காரிலும் விட மனம் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. . சர்வதேச நோய் பரவலிற்கு எதிரான போராட்டமானது பல வழிகளிலும் வகைகளிலும் நின்று நிதானத்து சிந்திக்கின்ற ஒரு சந்தர்ப்பத்தை வழிகோலியும்விட்டது. கடந்து வந்த வாழ்க்கையை மீளவும் நினைவுபடுத்திப்பார்க்கவும் நடந்துகொண்டிருப்பதை ஆழமாக அலசுவதற்கும் தளம் கூட அமைத்தது. இயற்கையைப்பற்றி, மனிதாபிமானம்பற்றி, உடலும் மனமும் பற்றி, வாழ்க்கையைப்பற்றி, தோல்விபற்றி, சமூக அமைப்புபற்றி, உணர்வுநிலைகள்பற்றி, அவலங்கள்
அங்கலாய்ப்புகள் பற்றி, தமிழ்மொழி பற்றி அதன் தொன்மைபற்றி இன்னமும் எத்தனையோ ...........என்ன நடக்குமோ என்ற பயத்துடனும் பேசினோம். பலவிதமான கலந்துரையாடல்கள், புதுப்புது சிந்தனைகள், ஆக்கபூர்வமான படைப்புகள், அழுகைகள், புதுப்புது கருத்தக்களுடன்ன் இணைவழி கருத்தரங்குகள் என நிறைந்து போயிருக்கறது. ஆனாலும் இன்னமும் நிலையில்லாத்தன்மையும், பயமும் ஓரத்தில் தொங்கிக்கொண்டுதான் இருக்கிறது. எல்லா வகையான அவலங்களைப்பார்த்து பயம், மக்களைப்பார்த்துப்பயம், பர்ர்க்கவேண்டியவர்களை பாராத பயம், அம்புலன்சை பார்க்க பயம், ...........இன்னமும் எத்தனையோ பயங்கள், சஞ்சலங்கள். அமைதியாக பரவிக்கிடந்தது நீலவானம். தூரத்தில் தொடராக தெரிந்த அழகிய பச்சைகளுக்குள் சூரியன் நிதானமாக மறைந்துகொண்டிருந்தது. அலட்டிக்கொள்ளாத வேகத்துடன் கார் தொடர்ந்து போய்கொண்டிருந்தது்.
எதிர்பார்புகளையும், நம்பிக்கைகளையும் மட்டுமே எண்ணிக்கொண்டு நாட்கள் நகர்கின்றது மீண்டும்.
コメント